தூத்துக்குடியில் பழமை வாய்ந்த வைகுண்டபதி பெருமாள் கோவிலில் நிலைக் கல் அமைக்கும் வைபவம் நடைபெற்றது.
தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வைகுண்டபதி பெருமாள் திருகோயிலில் கும்பாபிஷேக பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீஆண்டாள் சன்னதி ஆகிய மூன்று சன்னதிகளுக்கும் பழமை வாய்ந்த சிற்ப வேலைப்பாடுடன் கூடிய நிலை கல்கால் வைக்கும் வைபவம் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதி கல் மண்டப கட்டுமான பணி இன்று காலை நடைபெற்றது. கோவில் பிரதான பட்டர் வைகுண்ட ராமன் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, நிலை கல்கால் வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிவன் கோவில் செயல் அலுவலர் தமிழ் செல்வி, கும்பாபிஷேக கமிட்டி தலைவர் அழகர் ஜுவல்லர்ஸ் சேர்மன் ஜெயராமன், பெருமாள் கோவில் அறங்காவல் குழு தலைவர் செந்தில்குமார், சிவன் கோவில் அறங்காவல் குழு தலைவர் கந்தசாமி, தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செல்வ சித்ரா அறிவழகன் அறங்காலர்கள் மந்திரமூர்த்தி, சாந்தி, ஜெயலெட்சுமி, ஆறுமுகம், மகாராஜன், சுப்ரமணிய சுவாமி அறக்கட்டளைமகமை செயலாளர் கந்தப்பன், ஓட்டப்பிடாரம் முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் காந்தி காமாட்சி, தூத்துக்குடி நாடார்கள் மகிமை தலைவர் கேஏபி சீனிவாசன், சிவன் கோவில் பௌர்ணமி பூஜை கமிட்டி தலைவர் நெல்லையப்பன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் கட்டுமான திருப்பணிகள் நடைபெற்றாலும், புரட்டாசி மாதத்தில் நடைபெறும் சிறப்பு வழிபாடுகள் அனைத்தும் வழக்கம் போல் நடைபெறும். பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் கோவில் நிர்வாகத்தில் சிறப்பாக செய்யப்படும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்


