1839 – அலபாமாவில் இடம்பெற்ற பெரும் தீயில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் எரிந்து சேதமடைந்தன.
1839 – ஜோன் ஹேர்ச்செல் தனது முதலாவது ஒளிப்படத்தை கண்ணாடித் தட்டில் எடுத்தார்.
1850 – கலிபோர்னியா 31-வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவில் இணைந்தது.
1922 – கிரேக்க-துருக்கி போர் துருக்கியரின் வெற்றியுடன் முடிவுக்கு வந்தது.
1924 – ஹவாய், கௌவை நகரில் சர்க்கரைத் தொழிற்சாலைத் தொழிலாளர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது காவற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 16 பேர் கொல்லப்பட்டனர்.
1939 – இரண்டாம் உலகப் போர்: போலந்தின் குரோவ் நகர் மீது நாசி ஜெர்மனியர் குண்டுகளை வீசித் தாக்கினர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய விமானம் ஒரிகனில் குண்டு வீசியது.
1944 – பல்கேரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து சோவியத் சார்பு அரசு பதவியேற்றது.
1945 – இரண்டாவது சீன-ஜப்பான் போரில் ஜப்பான் சீனாவிடம் சரணடைந்தது.
1954 – அல்ஜீரியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1500 பேர் கொல்லப்பட்டனர்.
1965 – சூறாவளி பெட்சி நியூ ஓர்லியன்சில் இரண்டாவது தடவை தரைதட்டியதில் ஏற்படுத்தியதில் 76 பேர் கொல்லப்பட்டனர். $1.42 பில்லியன் சேதமடைந்தது.
1970 – பிரித்தானிய விமானம் பாலஸ்தீனத் தீவிரவாதிகளினால் கடத்தப்பட்டு ஜோர்தானுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
1990 – சத்துருக்கொண்டான் படுகொலை: மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் 5 கைக்குழந்தைகள், 42 பத்துவயதுக்கு குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் உட்பட 184 தமிழர் இலங்கை இராணுவத்தினரால் கொல்லப்பட்டனர்.
1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து தஜிகிஸ்தான் விடுதலையடைந்தது.
1993 – பாலஸ்தீன விடுதலை இயக்கம் இஸ்ரேலை தனிநாடாக அங்கீகரித்தது.
2001 – ஆப்கானிஸ்தானில் தேசிய முன்னணித் தலைவர் அகமது ஷா மசூட் கொலை செய்யப்பட்டார்.
2004 – இந்தோனீசியா, ஜகார்த்தாவில் அவுஸ்திரேலிய தூதரகத்துக்கு முன்னால் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – திறந்த அமெரிக்க டென்னிஸ் பந்தயத்தில் ரஷ்ய வீராங்கனை மரியா ஷரப்போவா வெற்றி பெற்றார்.


