தூத்துக்குடியில் புதிதாக அமைக்கப்பட்ட ஜீவன் மருத்துவமனையை அமைச்சர் பெ.கீதாஜீவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்
தூத்துக்குடி போல்பேட்டையில் ஜீவன் மருத்துவமனை 24 மணி நேர சிகிச்சை வசதி, சிறப்பு மருத்துவர்கள் மூலம் தீர்வு, மருந்தகம், பிசியோதரபி சிகிச்சை, தீவிர சிகிச்சை பிரிவு உள்பட பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புதிதாக அமையப்பெற்றுள்ளது. இம்மருத்துவமனை திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
இவ்விழாவுக்கு மருத்துவமனை மேலாண்மை இயக்குநர் ஜீவன் ஜேக்கப் தலைமை வகித்தார். சேலம் கிருபா மருத்துவமனை மருத்துவர் பிராங்கிளின் கிருபா முன்னிலை வகித்தார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ. கீதாஜீவன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினார்.
திறப்புவிழாவை முன்னிட்டு நீரிழிவு நோய் பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை ஆகியவை இலவசமாக செய்யப்பட்டது. இவ்விழாவில், அமைச்சரின் தாயார் எபனேசர் பெரியசாமி, மருத்துவர்கள் மகிழ்ஜான் சந்தோஷ், கீர்த்தனா மகிழ், மாநகர திமுக செயலர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத் தலைவர் பாலகுருசாமி, திமுக பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் அன்பழகன், மாநில பேச்சாளர் சரத்பாலா உள்பட பலர் பங்கேற்றனர்.


