தூத்துக்குடி மாநராட்சியில் பல்வேறு திட்டப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மீளவிட்டான் செல்லும் சாலையில் இருந்து குறிஞ்சி நகர் திரும்பும் பகுதியில் நடைபெற்று வரும் புதிய மழைநீர் வடிகால் பணிகளையும், எட்டையாபுரம் ரோடு ஹவுசிங் போர்டு பகுதியில் குடிநீர் கலங்களாக வருகின்றதாக வந்தபொது மக்களின் கோரிக்கையினையடுத்து அந்த பகுதியையும் மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, மாநகர துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தொ.நிர்மல்ராஜ் மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் ஆய்வாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.


