தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழக வீரர்-வீராங்கனைகள் தேர்வு வருகிற 17 ஆம் தேதி (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட அமெச்சூர் கபடி கழகச் செயலர் கிறிஸ்டோபர் ராஜன் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் சார்பில் மாநில அளவிலான பீச் கபடி போட்டிக்கு வீரர்-வீராங்கனைகள் தேர்வு சென்னை ஜவாஹர்லால் நேரு மைதானத்தில் இம்மாதம் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதில் பங்கேற்கவுள்ள தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழக வீரர்-வீராங்கனைகள் தேர்வு தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் புதன்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது. 4 ஆண்கள், 4 பெண்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவர். ஆண்கள் 85 கிலோ, பெண்கள் 75 கிலோ எடைக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு இல்லை.இதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட அமெச்சூர் கபடி கழகத் தலைவர் அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


