சரத்குமார் பிறப்பு : சூலை 14, 1954) தமிழ்த் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர் நடிகை ராதிகாவின் கணவரும் ஆவார் .முன்னாள் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்க தலைவர். தமிழ் திரைப்பட உலகில் புகும்போது எதிர்மறை வேடங்களில் நடித்து வந்தவர், சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார். அரசியல் இயக்கங்களில் பங்கேற்ற இவர் தற்போது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்னும் அரசியல்கட்சியினை துவக்கி நடத்தி வந்தார். இவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றி உள்ளார். இவர் 2011ல் தென்காசி தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றினார். தற்போது இவர் பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
எம். இராமநாதன் மற்றும் புசுபலீலா தம்பதியினருக்கு மகனாக புதுதில்லியில் 1954சூலை 14 அன்று பிறந்தார்.இவரது சகோதரி மல்லிகா குமார். இவர் காரைக்குடியை அடுத்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தலக்காவூர் குடும்பத்தை சேர்ந்தவர்.
கணிதத்தில் இளங்கலை பட்டப்படிப்பை சென்னை புதுக்கல்லூரியில் படித்தார்.


