தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றுள்ள கனிமொழி எம்பி வருகிற 13, 14, 15 ஆகிய தேதிகளில் மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்கிறார்.
இது தொடர்பாக திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் அமைச்சர் கீதாஜீவன் வெளியிட்ட அறிக்கையில், “நடைபெற்று முடிந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிகளில் I.N.D.I.A. கூட்டணி சார்பில் தி.மு.க. வேட்பாளராக கனிமொழி கருணாநிதி போட்டியிட்டு 5,40,729 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட அத்தனை வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்த தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். வருகிற ஜூலை 13,14,15 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி, தூத்துக்குடி, விளாத்திகுளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு. கனிமொழி கருணாநிதி அவர்கள் பொதுமக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளார்.
அதன்படி 13.07.2024 சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வானரமுட்டி கிராமத்தில் நன்றி அறிவிப்பு நிகழ்வு தொடங்கி, தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு கழுகுமலையிலும், மாலை 5.00 மணிக்கு வேலாயுதபுரத்திலும், மாலை 5.30 மணிக்கு செட்டிகுறிச்சியிலும், மாலை 6.00 மணிக்கு அய்யனாரூத்திலும், இரவு 6.30 மணிக்கு கயத்தாரிலும், இரவு 7.00 மணிக்கு அகிலாண்டபுரத்திலும், இரவு 7.30 மணிக்கு கடம்பூரிலும் இறுதியாக இரவு 8.00 மணிக்கு காமநாயக்கன்பட்டி கிராமத்தில் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி முடிகிறது.
தொடர்ந்து 14.07.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் மாலை 5.00 மணிக்கு பொட்டல்காடு கிராமத்தில் தொடங்கி, தொடர்ந்து முள்ளக்காடு, அத்திமரப்பட்டி விலக்கு, முத்தையாபுரம் பங்க் சந்திப்பு, அய்யன் கோவில் தெரு, தோப்புத் தெரு, ஏ.வி.எஸ். பள்ளி அருகில், சத்யா நகர், பக்கிள்புரம் சந்திப்பு, போல்டன்புரம் K.S.P.S. தியேட்டர் அருகில், சிதம்பர நகர் சந்திப்பு, பிரையண்ட் நகர் 12வது தெரு மத்தி, பிரையண்ட் நகர் 12வது தெரு மேற்கு கட்டபொம்மன் நகர், வள்ளிநாயகபுரம் சந்திப்பு, பிரையண்ட் நகர் 7வது தெரு மேற்கு, 3வது மைல், பாலிடெக்னிக்எதிரில் நன்றி அறிவிப்பு நிகழ்வு முடிகிறது.
அதுபோல 15.07.2024 திங்கள்கிழமை அன்று விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் மாலை 4.00 மணிக்கு குறுக்குச்சாலையில் தொடங்கி தொடர்ந்து வேடநத்தம், குளத்தூர், வைப்பார், வேம்பார், சூரங்குடி, அரியநாயகபுரம், விளாத்திகுளம், கரிசல்குளம், நாகலாபுரம், சின்னவ நாயக்கன்பட்டி, புதூர் இறுதியாக சிவலார்பட்டியில் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு முடிகிறது.
மேற்கண்ட இடங்களில் நடைபெறவுள்ள நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் அந்தந்த பகுதிக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகளை செய்திடவும், I.N.D.I.A. கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், கழகத் தோழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும், மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை மனுவாக எழுதிக் கொடுத்திடவும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


