தூத்துக்குடியில் போலீசார் பயன்படுத்திய 11 பழைய வாகனங்கள் வருகிற 15-ந் தேதி பொது ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “தூத்துக்குடி மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு 4 மோட்டார் சைக்கிள்கள், 7 கார்கள் ஆக மொத்தம் 11 பழைய வாகனங்கள் எந்த நிலையில் உள்ளதோ, அதே நிலையில் வருகிற 15-ந் தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அலுவலகம் முன்பு உள்ள மைதானத்தில் வைத்து பொது ஏலம் விடப்படுகிறது.
மேற்படி ஏலம் விடப்பட உள்ள வாகனங்களை பொதுமக்கள் வருகிற 14-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள். மேலும் ஏலத்தில் பங்கேற்க விரும்பும் நபர்கள் வருகிற 14-ந் தேதி அன்று ரூ.2 ஆயிரம் முன்பணமாக செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் முழுத்தொகை மற்றும் அதற்கு உண்டான 18 சதவீதம் சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் அரசுக்கு அன்றே ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். இது தொடர்பான விவரங்களுக்கு 9498194611, 9498196359 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தகவல்கள் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


