1890 – வயோமிங் ஐக்கிய அமெரிக்காவின் 44வது மாநிலமாக சேர்க்கப்பட்டது.
1909 – ஜெர்மனியின் எம்டன் நாசகாரிக் கப்பல் சேவைக்கு விடப்பட்டது.
1925 – சோவியத் ஒன்றியத்தின் செய்தி நிறுவனம் டாஸ் ஆரம்பிக்கப்பட்டது.
1925 – இந்திய ஆன்மிகத் தலைவர் மெஹெர் பாபா இறக்கும் வரையான (44-ஆண்டுகள்) மௌன விரதத்தை ஆரம்பித்தார். இந்நாள் அமைதி நாளாக அவாரின் பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.
1941 – இரண்டாம் உலகப் போர்: போலந்தின் ஜெட்வாப்னி நகரில் நூற்றுக்கணக்கான யூதர்கள் நாசி ஜெர்மனியரினால் படுகொலை செய்யப்பட்டனர்.
1951 – கொரியப் போர்: அமைதிப் பேச்சுக்கள் ஆரம்பமாயின.
1956 – இலங்கை, யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி கோயில், வண்ணார்பண்ணை சிவன் கோவில், வரதராசப்பெருமாள் கோயில் ஆகியவற்றின் உள்ளே முதற்தடவையாக குறைந்த சாதியினர் சென்று வழிபட அனுமதிக்கப்பட்டனர்.
1958 – அலாஸ்காவில் மிகப் பெரும் சுனாமி அலை (524 மீட்டர் உயரம்) பதியப்பட்டது.
1962 – உலகின் முதல் தொலைத் தொடர்பு விண்கலமான டெல்ஸ்டார் விண்ணில் ஏவப்பட்டது.
1973 – வங்காள தேசத்தை அங்கீகரிக்கும் தீர்மானம் பாகிஸ்தான் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
1973 – பஹாமாஸ் பொதுநலவாயத்தின் கீழ் முழுமையான விடுதலை அடைந்தது.
1978 – மௌரித்தானியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அதிபர் மொக்தார் டாடா பதவியிழந்தார்.
1991 – தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி பன்னாட்டுத் துடுப்பாட்ட வாரியத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டது.
1991 – யாழ்ப்பாணம் ஆனையிறவு இராணுவத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் போர் தொடுத்தனர்.
1992 – போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல குற்றங்களுக்காக முன்னாள் பனாமாத் தலைவர் மனுவேல் நொரியேகா புளோரிடாவில் 40 ஆண்டு கால சிறைத்தண்டனை பெற்றார்.
2006 – இந்தியாவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்சாட்-4 செயற்கைக் கோளை ஏற்றிச் சென்ற ஜி.எஸ்.எல்.வி. விண்கலம் இயந்திரக் கோளாறினால் கடலில் வீழ்ந்தது.


