தூத்துக்குடி மாவட்டத்தில் கடல்சார் சுற்றுலாவை மேம்படுத்துவது தொடர்பாக மன்னார் வளைகுடா உயிர்க்கோள் காப்பக அறக்கட்டளை கடற்கரையை ஆட்சியர் லட்சுமிபதி ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடல்சார் சுற்றுலாவை மேம்படுத்துவது தொடர்பாக வேம்பார் மீன் பிடி இறங்கு தளம் அருகில் உள்ள கடற்கரையை மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி இன்று பார்வையிட்டார். மேலும், தமிழ்நாடு வனத்துறை மன்னார் வளைகுடா உயிர்க்கோள் காப்பக அறக்கட்டளை தருவைக்குளம் சமூகம் சார்ந்த சுழல் சுற்றுலா தளத்தை ஆட்சியர் பார்வையிட்டார். ஆய்வின் போது வனத்துறை அதிகாரிகள் உட்பட பலர் உடனிருந்தனர்.


