நெல்லை அரசு அருங்காட்சிய காப்பாட்சியராக பணியாற்றி வந்தவர் சிவ சத்திய வள்ளி. இவர் பதவி உயர்வு காரணமாக சென்னை அருங்காட்சியகத்துக்கு பணி மாறுதல் பெற்று செல்கிறார். இவரை பாராட்டு விதமாக பல்வேறு அமைப்பினர் அவரை சந்தித்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் முத்தாலங்குறிச்சி தாமிரபரணி ஆற்றில் கிடைத்த மிகவும் பழமையான நந்தி சிலையை அப்போதைய மாவட்ட ஆட்சி தலைவர் மரு.கி . செந்தில் ராஜ் அவர்கள் அறிவுருத்தலின் படி மீட்டு, அதை நெல்லை அருங்காட்சியகத்தில் ராட்சத இயந்திரம் மூலம் கொண்டு வந்து நிருவியது. செய்துங்கநல்லூரில் உள்ள பழங்கால குலுக்கை ஒன்றை செய்துங்கநல்லூர் சண்முக சுந்தரம் மூலமாக பெற்று அதை அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைத்த வகைக்காகவும் பொருநை ஆதிச்சநல்லூர் தொல்லியல் பாதுகாப்பு கழக நிறுவனர் முத்தாலங்குறிச்சி காமராசு பாராட்டி, நினைவு பரிசு வழங்கினார். அப்போது கவிஞர் சுப்பையா, எழுத்தாளர் காமராசு செல்வன் உள்பட பலர் உடனிருந்தனர்.



