தங்கம் தென்னரசு ஒரு தமிழக அரசியல்வாதியும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் தமிழக அமைச்சரவையில் நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்தித்துறைத்துறை அமைச்சராகப் பணியாற்றுகிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். இவர் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் வி. தங்கபாண்டியனின் மகனும் மற்றும் பெண் கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியனின் அண்ணனும் ஆவார்.
தென்னரசு மல்லாங்கிணறு கிராமத்தில் 03 சூன், 1966 ஆம் ஆண்டு பிறந்தார். பொறியியல் பட்டம் பெற்ற இவர் ஸ்பிக் நிறுவனத்தில் பத்து வருடங்கள் பொறியாளராகப் பணியாற்றியுள்ளார்.
இவர் தமிழக அமைச்சரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருச்சுழி சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக தொழிற்துறை (தொழிற்துறை, ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை, தொல்பொருள்) அமைச்சராக பதவியேற்றார். பின்பு மே 11 2023 அன்று நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்தித்துறைத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.


