கோவில்பட்டியில் அரசு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு தேவர் சமூக நலச்சங்கம் சார்பில் பரிசளிப்பு விழா நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் அசோக்குமார் தலைமை வகித்தார். சங்க செயலாளர் வேல்முருகன்,பொருளாளர் கார்மேக பாண்டியன்,மேனாள் காவல்துறை அலுவலர் ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர் மாரிமுத்து வரவேற்றார்.
விழாவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது. ஆப்பநாடு மறவர் சங்கத் தலைவர் டாக்டர் ராம்குமார்,திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகி சௌத்ரி தேவர், செண்பக ராஜன் நினைவு துவக்கப்பள்ளி நிறுவனர் சிவ கணேஷ் குமார்,ஆகியோர் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.
இதில் மேனாள் மாவட்ட நூலக ஆய்வாளர் பூல் பாண்டி,அய்யனேரி ஊராட்சி மன்ற தலைவர் காளியப்பன்,நகர் மன்ற உறுப்பினர் முத்துலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.துணைச் செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.


