பாலஸ்தீனின் ரஃபா வீதிகளை ரத்தமாக்கிய சியோனிச இஸ்ரேலின் அடாவடியை கண்டித்து செய்துங்கநல்லூர் முகைதீன் ஜாமியா பள்ளிவாசல் வளாகத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்டிபிஐ வர்த்தகரணி தலைவர் நவாஸ் தலைமை வகித்தார். செய்துங்கநல்லூர் கிளைத் தலைவர் ஒலிம்பிக் மீரான் முன்னிலை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் தொகுதி தலைவர் அபூபைஷ் கண்டன உரையாற்றினார்.
இதில் எஸ்டிபிஐ கட்சியினர், கிளை நிர்வாகிகள், ஜமாத்தார்கள், ஊர் பொதுமக்கள் இளைஞர்கள் என 100க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு ஐ.நா போர்க்குற்றவாளி இஸ்ரேல் மீது தடை விதிக்க வேண்டியும், பாலஸ்தீன் மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும், இந்திய அரசு இனவெறி இஸ்ரேலுடனான உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்று கண்டன கோஷங்கள் எழுப்பினர்.


