தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் ஊராட்சி ஒன்றியம், வல்லநாடு ஊராட்சியில் வெள்ளையத்தேவன் மணி மண்டபம் அமைந்துள்ள தெருவில் உள்ள சாலை மிக மோசமாக சேதமடைந்து கழிவு நீர் தேங்கிய நிலையில் உள்ளது. இந்த தெருவில் சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் மணி மண்டபம், VTVD உயர்நிலைப்பள்ளி,பெருமாள் கோவில்,விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
மேலும் மத்திய அமைச்சர்கள், அரசியல் முக்கிய பிரமுகர்கள் வந்து செல்ல கூடிய பிரபலமான கோசாலை இந்த தெருவில் அமைந்துள்ளது.
இந்த பிரதான தெருவில் அடிக்கடி முக்கியமான பிரமுகர்கள் வந்து செல்வதால் இந்த தெருவில் சேதமடைந்த அனைத்து சாலையையும் சிறப்பான முறையில் புதிதாக சாலை அமைத்து தருமாறு தாழ்மையுடன் பொது நல நோக்கத்துடன் கேட்டுக் கொள்கிறேன்.
-மு.சுகன்
பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு,


