இந்தியாவில் மிகவும் பாரம்பரிய மிக்க கலை களரி அடிமுறை. மனிதன் நாகரீகம் தோன்றும் போதே களரி கலையும் தோன்றி விட்டது. இந்தியாவின் தென் தமிழகத்தில் பிறந்த இந்த கலை இந்தியா முழுவதும் பரவி, போர்களத்தில் சிம்ம சொப்பனமாக விளங்கியது. இதனால் பிற்காலத்தில் இந்தியாவை ஆள வந்த ஆங்கிலேயர்கள் களரி அடிமுறையை கண்டு அஞ்சினர், எனவே களரி கலைக்கு இந்தியாவில் தடை விதித்தனர். ஆனாலும் களரி அடிமுறையையும், வீரர்களையும் கட்டு படுத்த இயலவில்லை.

இதற்கிடையில் களரி பல்வேறு பரிணாமம் எடுத்து சீனா உள்பட பல்வேறு நாடுகளுக்கு காரத்தே , குங்பூ போன்ற கலைகளாக பிரபலமானது. நமது களரி அடிமுறை சீனா சென்று,அங்கிருந்து சீன சுவடு என மீண்டும் இந்தியாவுக்குள் நுழைந்தது. எல்லாவற்றிக்கும் மூலமான களரியை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என உலக களரி அடிமுறை கூட்டமைப்பு நிறுவனர் முனைவர் ரமேஷ் ரத்தினகுமார் முன்னெடுத்தார். இதனால் தற்போது உலக நாடுகளில் சுமார் 27 நாடுகளில் களரி அடிமுறையை எடுத்துச்சென்றுள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாடுகளிலும் சாம்பியன் ஷிப் போட்டி நடந்து வருகிறது. உலக களரி கூட்டமைப்பின் கீழ் ஒவ்வொரு நாடுகளிலும் தற்போது சாம்பியன் ஷிப் போட்டி நடந்து வருகிறது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரிலியா போன்ற நாடுகளில் தற்போது களரி சாம்பியன் ஷிப் போட்டி நடந்து முடிந்துள்ளது. இந்தியாவில் களரியை தடை செய்த இங்கிலாந்தில் களரி ஷம்பியன் ஷிப் போட்டியை நடத்திய உலக களரி அடிமுறை கூட்டமைப்பினரை மக்கள் பாராட்டினார்கள்.

முதன் முறையாக அமெரிக்காவில் வடகரல் என்ற மாகானத்தின் ராலே தலைநகரத்தில் களரிக்காக தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. அமெரிக்காவில் உள்ள 10 மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். களரிக்கான போட்டியில் அடிமுறை, சிலம்பம், வேல்கம்பு, களரி பயிற்று வீரர்கள் கலந்துகொண்டு விளையாடினர். அமெரிக்கா தேசிய சாம்பியன்ஷிப்பை அமெரிக்கா வாரிசுவில் நகர மேயர் ஜே. காவ்லி குத்து விளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு உலக களரி கூட்டமைப்புக்கு பதிவு செய்த அமெரிக்க களரி கூட்டமைப்பு தலைவர் ரமேஷ் ரத்தினகுமார் தலைமை வகித்தார். அமெரிக்க களரி கூட்டமைப்பு தலைமை செயலாளர் பாரத் ராமமூர்த்தி தேசிய சாம்பியன் ஷிப்பிற்க்கான விளையாட்டு முறைகளை வடிவமைத்து நடத்தி கொடுத்தார்.
உலக களரி கூட்டமைப்பின் சார்பாகவும், அமெரிக்க கூட்டமைப்பு சார்பாகவும் பொருளாதார ரீதியாக பொருளாளர் லதா ஜெயராமன் ஏற்பாடு செய்திருந்தார். அமெரிக்காவில் களரி அடிமுறையை வெற்றிகரமாக நடத்துவதற்கு நகரில் உள்ள தொழிலதிபர்கள் பத்துக்கு மேற்பட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். அமெரிக்காவில் உலக தரம் வாய்ந்த விளையாட்டாக களரியை மாற்றி கொடுப்பதற்காக டாக்டர் முனியசாமி விளையாட்டுக்கான விதிமுறைகளை வடிவமைத்தார்.
சுரேஷ் மணி ஆசான், சுரேந்திரன் ஆசான் ஆகியோர் உதவி புரிந்தனர். இந்த விளையாட்டுகள் அமெரிக்கா மாணவர்கள் இடையே பெரும் வரவேற்பாக இருந்தது. களரி கலையை அமெரிக்கா முழுவதும் பரவுவதற்கு இந்த சாம்பியன் ஷிப் போட்டி மிகவும் உதவியாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை உலக களரி அடிமுறை முதன்மை அலுவலர் டாக்டர் செந்தில்ராஜ் குமார் செய்திருந்தார். தொடர்ந்து களரி கலையை உலகம் முழுவதும் கொண்டு செல்ல அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது



