தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணி அருகே பூப்பாண்டியபுரம் மற்றும் புதிய முனியசாமிபுரத்தில் உள்ள பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் மற்றும் ஏற்பட்ட மழை வெள்ளம் மற்றும் சில நாட்களாக பெய்த மழை நீரும் சேர்ந்து தூத்துக்குடி மாவட்டத் தில் அதிக பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக, பூ பாண்டிபுரம் புதிய முனியசாமி புரம் ஆகிய குடியிருப்புப் பகுதிகளில் பல மாதங்களாக மழைநீர் தேங்கிய தால் உள்ளது மற்றும் சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையினாலும் தண்ணீர் அதிகமாக தேங்கியுள்ளது இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மாப்பிள்ளையூரணி அருகே பூப்பாண்டியபுரம் புதிய முனியசாமி புரம் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியாமல் தேங்கியுள்ளது. அப்பகுதிகளில் குப்பைகள் முறையாக அகற்றப்படவில்லை. இதனால், தொற்று நோய் பரவும் அபாயமுள்ளது. எனவே, மழைநீரை விரைந்து அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், குறைந்த மின்னழுத்தப் பிரச்னை இருப்பதால் மின்சாதனங்கள் பழுதாவதாகவும், இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனவு அக்பகுதி மக்கள் கூறுகின்றனர். இனிமேலும் நடவடிக்கை எடுக்கவில்லை யென்றால் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


