தூத்துக்குடியில் தையல் பயிற்சி மற்றும் கணினிபயிற்சி முடித்தவர்களுக்கு அமைச்சர் கீதா ஜீவன் சான்றிதழ்களை வழங்கினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நடைப் பெற்ற நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என். பெரியசாமி கல்வி அறக்கட்டளை சார்பாக இலவச தையல் பயிற்சி மற்றும் கணினிபயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்களை சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் ஜீவன் ஜேக்கப், திமுக மாநகரச் செயலாளர் எஸ்ஆர் ஆனந்த சேகரன், மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி கோட்ராஜா, தூத்துக்குடி வடக்கு மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மற்றும் கட்சி நிர்வாகிகள், மகளிர் அணியினர் கலந்து கொண்டார்கள்.


