பாரதிதாசன் 29 ஏப்ரல் 1891 – 21 ஏப்ரல் 1964) பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து, பெரும் புகழ் படைத்த பாவலர் ஆவார். இவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம் ஆகும். தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால், ‘பாரதிதாசன்’ என்று தம் பெயரை மாற்றிக் கொண்டார். பாரதிதாசன், தம் எழுச்சி மிக்க எழுத்துகளால், “புரட்சிக் கவிஞர்” என்றும் “பாவேந்தர்” என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் (கவிதை வடிவில்) ஒரு திங்களிதழை நடத்தி வந்தார்.
தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த பாரதிதாசன், அவரது மானசீக குருவாகப் சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். அவரது பாடலைத் தனது நண்பனின் திருமண நிகழ்வின் போது பாடிய அவர், பாரதியாரை நேரில் சந்திக்கவும் செய்தார். பாரதியிடமிருந்து பாராட்டுகள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு. அன்றுமுதல், அவர் தனது இயற் பெயரான கனகசுப்புரத்தினம் என்பதைப் ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.
- “எங்கள் திருநாட்டில் எங்கள் நல்லாட்சியே”..
- புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்..
- தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்..
இப்பாடலின் ஒரு வரியை குறிப்பிட்டு, ஆஸ்கார் விருதுகள் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 2022 இல் ழகரத்தை ஆயுதமாக ஏந்திய தமிழணங்கு படம் பதிந்தபோது அதில் இடம்பெற்ற வரிகள் இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர் என்பதாகும்.
- எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!..


