நெல்லை,ஏப்.19:நெல்லை யில் விவசாயத்திற்கு நீர் மேலாண்மை கட்டமைப்பு களை உருவாக்குவதற்காக தாமிரபரணியின் கிளை நதியான பச்சையாற்றில் மருதநாயகம் தடுப்பணை கட்டியதற்கான ஆதாரங் கள் கிடைத்துள்ளதாக தஞ்சை, தமிழ் பல்கலைக்க ழக தொல்லியியல் துறை தலைவர் செல்வகுமார் கருத்தரங்கில் தெரிவித் துள்ளார்.
தமிழ்நாட்டின் ராம நாதபுரம் மாவட்டம், பனையூரில் பிறந்தவர் மருதநாயகம். இவர் தன்னு டைய இளமைப்பருவத்தில் இஸ்லாமிய மார்க்கத்தை விரும்பி ஏற்று முகமது யூசுப் கான் என அழைக் கப்பட்டார். பிரெஞ்சுக் காரர்களின் படையில் வேலைபார்க்கும் போது தமிழ், பிரெஞ்சு.போர்த்து கீசியம், ஆங்கிலம், உருது ஆகிய மொழிகளை கற்று தேர்ந்தார். 1750-களில் ஆங் கிலேயருக்கும். பிரெஞ்சுக் காரர்களுக்கும் நாடு பிடிக் கும் போர் நடந்தபோது. முகமது யூசுப்கான் திற மையைக் கண்டு வியந்த ராபர்ட் கிளைவ், அவரை தன் படையில் இணைத்து, ஐரோப்பிய முறையில் ராணுவ பயிற்சி கொடுக்க உதவினார்.
ஆற்காடு 1752ல் நடந்த நடந்த ஆ முற்றுகையின் போது முக மது யூசுப்கான் எனும் மருத நாயகம் சிறந்து விளங்கவே சிப்பாய் படை களுக்கு தளபதியாகி, கான்சாகிப் எனும் பட்டம் பெற்றார். 1755ல் பாளையக்காரர் களை அடக்கி,கப்பம் வசூல் செய்ய அனுப்பி வைக்கப்பட்டார். கப்பம் சரியாக வசூல் செய்து கொடுத்ததால், 1759ல் மதுரை, நெல்லையின் கவர்னராக, ஆங்கில அர சில் அங்கம் வகித்தார். கோயில் நிலங்களை மீட் டுக் கொடுப்பது, விவசா யத்திற்கு நீர் மேலாண்மை கட்டமைப்புகளை உரு வாக்குவது என மக்கள் பணிகளால் அவருக்கு மக் கள் மத்தியில் செல்வாக்கு ஏற்பட்டது.
இந்நிலையில், மக்க ளிடம் ஆங்கிலேயருக்கு எதிரான உணர்வை தூண் டுவதாக ஆங்கிலேய அரசு அவரை கைது செய்ய உத்தரவிட்டது. இதனால் 1763ல் ஏற்பட்ட போரில் ஆங்கிலேயரை தோற்க டித்து மதுரையில் தனது மஞ்சள் நிறக்கொடியை ஏற்றினார் மருதநாயகம்.
இதனால் அவரை வீழ்த்த ஆங்கிலேய அர சும். ஆற்காடு நவாப் அரசும் இணைந்து 1764ல் மீண்டும் அவரது கோட் டையை முற்றுகையிட்டது. போரில் அவரை தோற்க டிக்க முடியாததால். அவ ரது உதவியாளர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டு 1764ம் ஆண்டு அக்டோபர் 13ம்தேதி மருதநாயகம் வீட் டில் தொழுகையில் ஈடுபட் டிருந்த போது பிடிக்கப்பட் டார். அதேமாதம், 15ம்தேதி மதுரை. சம்மட்டிபுரத்தில் உள்ள மரத்தில் தூக்கிலிடப் பட்டார். அதன் பின்னரும் ஆங்கிலேய அரசு அவரது உடலை பல பாகங்களாக வெட்டி பல்வேறு இடங்க ளில் புதைத்த சம்பவம் இந் திய விடுதலை போராட்ட வரலாற்றில் பெரும் தாக் கத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியியல் துறை மாணவிகள் ஆஸ்லின் காருண்யா, சுபாஷிணி ஆகியோர் சமீபத்தில் நெல்லை. பாளையங்கோட்டை அருகே தருவையில் தாமிரபரணியின் கிளை நதியான பச்சையாற்றில் அமைக்கப்பட்ட தடுப்ப ணையில் 264 ஆண்டுகள் பழமையான கல்வெட்டை கண்டு பிடித்தனர். அந்த கல்வெட்டில் ‘1760ம் ஆண் டில் அசாது மம்மது இசபு கான் பாதா சாயபு என்பவர் தடுப்பணை டியதாக’ குறிப்பிடப்பட் டுள்ளது. இதுதொடர்பான தங்களது ஆய்வுக்கட்டுரை குறித்து மாணவிகள் ஆஸ் லின் காருண்யா, சுபாஷினி ஆகியோர் தஞ்சை. தமிழ் பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் பேசினர்.
இதுகுறித்து தமிழ் பல்க லைக்கழக கடல்சார் வர லாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறை தலை வர் செல்வகுமார் கூறு கையில், ‘அசாது மம்மது இசபு கான் பாதா சாயபு என்பது, மருதநாயகம் எனப்படும் யூசுப்கானை குறிக்கும். யூசுப்கான் 1759 முதல் 1764 வரை மதுரை, நெல்லை உள்ளிட்ட பகு திகளை ஆட்சி செய்தார். இவரது ஆட்சியில் விவ சாயத்திற்காக நீர் நிலை களை சீரமைப்பது, வியா பாரிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது என பல நல்ல திட்டங்கள் கொண்டு வரப்பட்டது. இதுபோல் பாளை தருவையில் பச் சையாற்றில் தடுப்பணை யைக் கட்டி நெல்லை பகு தியில் விவசாயம் செழிக்க உதவியுள்ளார் என்பதற் கான சான்றாக இந்த கல் வெட்டை எடுத்துக்கொள் ளலாம்’ என்றார்.
இதுதொடர்பான ஆய் வில் ஈடுபட்ட தொல்லியி யல் துறை மாணவிகளான ஆஸ்லின் காருண்யா, சுபாஷிணி ஆகியோரை நெல்லை மனோண்ம இணியம் சுந்தரனார் பலக லைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர், தொல்லியல் துறை தலைவர் வர் சுதாகர் உள்ளிட்ட பேராசிரியர்கள் பலர் பாராட்டினர்.


