தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதற்காக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள செய்துங்கநல்லூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளான கருங்குளம், புளியங்குளம், சேரகுளம், ராமானுஜம்புதூர், கொங்கராயகுறிச்சி, ஆறாம்பண்ணை உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
8 மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கின்ற காரணத்தினாலும், வேலைக்கு செல்பவர்களும் காலையிலேயே தங்களது வாக்குகளை நீண்ட வரிசையில் நின்று பதிவு செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறால் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் வாக்களிக்க வந்த வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு தனது வாக்கை செலுத்தினார்.



