`பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்டால் ஏன் வாந்தி, மயக்கம் வருகிறது?’ என்பது.
பல்லி சுத்தமான இடத்தில் மட்டுமே இருப்பதில்லை. தோட்டம் முதல் வீட்டின் கழிவறை வரை பல இடங்களில் சுற்றித் திரியக்கூடியது. அந்தச் சமயங்களில் பல்லியின் உடல், கால்கள் எனப் பல இடங்களில் கண்ணுக்குத் தெரியாத லட்சக்கணக்கான கிருமிகள் ஒட்டிக்கொண்டிருக்கும்.
அதோடு அவை ஏற்கெனவே உண்ட பல்வேறு பூச்சிகள், அதன் சிறுநீர், கழிவுகள்… என அனைத்தும் உணவில் கலக்கும்போதுதான் உணவு கெட்டுப்போகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த உணவுகளை சாப்பிடும்போது அது வாந்தி, மயக்கம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.
அப்போது, இந்தக் கிருமிகள் வாந்தி, வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற நோய்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. என்றாலும், இந்தக் கிருமிகள் உடலுக்குள் நுழைந்து வளர்ந்து, அறிகுறிகள் தெரியவே ஒரு சில நாள்கள் ஆகும். அப்படி இருந்தாலும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது.
உடல்நல பாதிப்பால் வாந்தி, மயக்கம் ஏற்படுவதைவிட, பயத்தால் ஏற்படும் வாந்தி, மயக்கமே அதிகமாக இருக்கும். இதனால்தான் பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாகச் செய்திகள் வருவதைப் பார்க்கிறோம்.
ஏனெனில், பல்லி விழுந்த உணவைச் சாப்பிடும் வரை ஒன்றும் தெரிவதில்லை. உணவு காலியாகும்போது பாத்திரத்தின் அடியில் இறந்துகிடக்கும் பல்லியைப் பார்த்ததும்தான் சாப்பிட்டவருக்கும், அது பற்றிக் கேட்டவருக்கும் பயம் தொற்றும். இதனால் ஏற்படும் அருவருப்பாலும், பல்லி பற்றிய மரண பயத்தாலும், பதற்றத்தாலும்தான் வாந்தி ஏற்படுகிறது. அதிலும் பள்ளிகளிலும் விடுதிகளிலும் ஒருவரைப் பார்த்து மற்றொருவர் பயந்து மொத்தக் குழந்தைகளும் வாந்தி எடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். அதோடு, உணவு கெட்டுப்போயிருந்தாலும், வாந்தி ஏற்படுவது இயற்கையே.
அதிகப்படியான வாந்தியால் ஏற்படும் டிஹைட்ரேஷனால் ( Dehydration) மயக்கம் உண்டாகிறது. இதனால்தான் மருத்துவர்கள் குளுக்கோஸ் ஏற்றுவதற்குப் பரிந்துரைக்கிறார்கள். மற்றபடி உயிரிழப்பு என்கிற அளவுக்கு பயப்படத் தேவையில்லை. குழந்தைகளையும் பயமுறுத்தத் தேவையில்லை.
எல்லாவற்றையும்விட பல்லி உள்ளிட்ட வேறு எந்தப் பூச்சியும் உணவில் விழாமல் பாதுகாப்பாக வைத்திருப்பதுதான் என்றும் எப்போதும் மிகச் சிறந்த வழி’’
வெங்காயத்தை வெட்டி வைத்தாலோ அல்லது சாற்றை சுவர்களில் தெளித்தால் பல்லிகள் போய்விடும். மயில் இறகுகள் பல்லிகளை பயமுறுத்துகின்றன. எனவே மயில் இறகுகளை வீட்டில் வைத்திருந்தால் அந்த பகுதிகளை பல்லிகள் அணுகாது. அதேபோல, காபி மற்றும் தக்காளி பொடியை தண்ணீரில் கலந்து பேஸ்ட் செய்து அவற்றை வைத்தாலும் பல்லிகள் அங்கு வராது.
பல்லி ஒருவரை கடிக்கும் பட்சத்தில் சருமத்தில் தடிப்புகள் அல்லது சொறி போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு.. மேலும் அதன் விஷம்… வீட்டில் பல்லிகள் காணப்படுவது மிகவும் சாதாரணமான ஒன்று. அவற்றால் மனிதர்களுக்கு பெரும் அளவில் எந்தவித ஆபத்துகளும் ஏற்படுவதில்லை


