தூத்துக்குடி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது நவத்திருப்பதி கோவில்கள். இந்த கோவிலில் 9வது மற்றும் கடைசி திருப்பதியான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோவில் குருஸ்தலமாக விளங்குகிறது.
இங்கு ஆண்டுதோறும் பங்கு உற்சவத்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். அதே போல் இந்த ஆண்டும் திருவிழா கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவிழா நாட்களில் சுவாமி பொலிந்துநின்றபிரான் பரங்கி நாற்காலி, சிம்மவாகனம், அனுமார் வாகனம், சேஷவாகனம், கருட வாகனம், யானை வாகனம், இந்திர வாகனம், குதிரை வாகனம், புன்னைமர வாகனத்திலும் தினமும் மாடவீதி மற்றும் ரத வீதிகளில் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடந்தது. தேரில் பொழிந்து நின்ற பெருமாள் தாயாருடன் கோவிலைச் சுற்றி முக்கிய ரதவீதிகள் வழியாக வீதி வந்தார். பக்தர்கள் கோவிந்தா கோபாலா கோஷம் முழங்க வீதிவழியாக பாடல்களை பாடி பாடி தேர் முன்பு வந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


