தூத்துக்குடி சிவன் கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு நாளை (பிப்.9) பத்திர தீபம் ஏற்றப்பட்டு பஞ்சமூர்த்திகள் ரதவீதியுலா நடக்கிறது.
தூத்துக்குடி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவில் என்று அழைக்கப்படும் ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் தை அமாவாசையை முன்னிட்டு 110 ஆம் ஆண்டு பத்திர தீப விழா நாளை 09.02.2024 தை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இதையொட்டி காலை 8.30 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, கும்ப பூஜை, 9.30 மணிக்கு வேத பாராயணம், ஹோமம், 10.35 மணிக்கு பூர்ணாஹீதி, தீபாராதனை, 11.00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் அபிஷேகம், மதியம் 12.30 மணிக்கு தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி, 1.00 மணிக்கு மூலஸ்தான கும்பாபிஷேகம், 1.30 மணிக்கு பஞ்சமூர்த்திகள் கும்பாபிஷேகம் தீபாராதனை நடக்கிறது.
மாலை 5.00 மணிக்கு கோவில் பிரகாரம் முழுவதும் பத்திர தீபம் ஏற்றப்படும். 6.00 மணிக்கு திருமுறை இசை, 7.00 மணிக்கு நாதஸ்வர இசை, 7.30 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனங்களில் எழுந்தருளி தீபாராதனை, 8.00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் ரதவீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், மற்றும் தை அமவாசை கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.


