தூத்துக்குடியில் பத்திரகாளியம்மன் கோவிலில் தை திருவிழாவை முன்னிட்டு அம்மன் வீதி உலா நடைபெற்றது.
தூத்துக்குடியில் அமைந்துள்ள பழமையான கிராம தேவதை என அழைக்கப்படும் பத்திரகாளியம்மன் கோவிலில் தை திருவிழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதில் பலவித வண்ண மலர்கள் மற்றும் பச்சை நிற பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பத்திரகாளி அம்மன் பித்தளை சப்பரத்தில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது.
பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை அமைச்சர் கீதாஜீவன் வழிகாட்டுதலின்படி திமுக மாவட்ட பிரதிநிதி தெர்மல் சக்திவேல் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மஞ்சுளா இளங்கோவன், மோகன்ராஜ், போத்தீஸ் ராமசாமி, சோமு, மாரிமுத்து, மணி, மாரீஸ்வரன், ஆனந்த்ராஜ், சுப்பையா, உலகநாதன், மணிவண்ணன், பொன்ராஜ், தாயப்பன், உள்ளிட்டோர் செய்திருந்தனர்.


