செய்துங்கநல்லூர் வளர்ந்து வரும் கிராமாகும். இந்த கிராமத்தில் நாளுக்கு நாள் குடியிருப்பு அதிகமாகி கொண்டு வருகிறது. எனவே பொதுமக்களுக்கு மின்சாரம் தங்குதடையின்றி வழங்க மின்வாரியம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. தென்னஞ்சோலை பகுதியில் மின்சார பற்றாக்குறை இருந்து வந்தது. எனவே இந்த பகுதிக்கென 7.25 லட்சம் செலவில் புதிய டிரான்ஸ் பார்மர் அமைக்கும் பணி நடந்து, தற்போது பயன்பாட்டுக்கு வந்தது. இந்த புதிய டிரான்ஸ்பார் துவங்கும் நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மின்வாரிய செயற்பொறியாளர் (ஊரகம்) சின்னத்துரை தலைமை தாங்கி புதிய டிரான்ஸ் பார்மரை துவங்கி வைத்தார். செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன், விவசாய சங்கதலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீவைகுண்டம் உதவி செயற்பொறியாளர் உஷாதேவி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, ஸ்ரீவைகுண்டம் உதவி பொறியாளர்கள் முரசொலி மாறன், சங்கீதா, சமூக சேவகர் சுடலை, சித்திரை பாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர். செய்துங்கநல்லூர் உதவி பொறியாளர் சுரேஷ்குமார் நன்றி கூறினார்.


