முத்தாலங்குறிச்சியில் மிகவும் பழமையான சிவகாமி சமேத வீரபாண்டீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டது. சிவன் மற்றும் சிவகாமி, பைரவர், நந்தி, ராம விநாயகர், லெட்சுமி நரசிம்மருக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் நடந்தது. பிரதோஷ விழாவை முன்னிட்டு இந்த கோயில் சிவன், சிவகாமி, நந்திக்கு சிறப்பு அபிசேகம் நடந்தது. பின் பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை சேகர் கம்பர் செய்திருந்தார். இதற்கான ஏற்பாடுகளை முத்தாலங்குறிச்சி சிவகாமி சமேத வீரபாண்டீஸ்வரர் ஆன்மிக பேரவை யினர் செந்தூர் ராஜ் தலைமையில் செய்து இருந்தனர்.


