பொத்தகாலன்விளை புனித திருக்கல்யாண மாதா திருத்தல திருவிழாவில் அன்னையின் தேர்ப்பவனி இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அன்னையை வழிப்பட்டனர்..
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பொத்தகாலன்விளை புனித திருக்கல்யாண மாதா திருத்ததல 111-வது ஆண்டு தேரோட்டத் திருவிழா ஜன. 14ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் திருப்பலி, திருயாத்திரை திருப்பலி, நற்கருணை ஆசீர் நடைபெற்றது. தொடர்ந்து திருவிழா கொடியை திருத்தல அதிபர் வெனிசுகுமார் அர்ச்சித்து, ஏற்றி வைத்தார். அருட்தந்தை டக்லஸ் மறையுரை, நற்கருனை ஆசீர் வழங்கினார்.
தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெற்ற இத்திருவிழாவில் தினமும் காலை 5.30 மணிக்கு முதல் திருப்பலியும், 7.30 மணிக்கு திருயாத்திரையுடன் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை மறையுரையுடன் கூடிய நற்கருனை ஆசீரும் நடைபெற்றது. 8-ம் திருவிழாவான ஜன. 21-ம் தேதி மாலையில் சாத்தான்குளம் மறைவட்ட முதன்மைகுரு ஜோசப் ரவி பாலன் தலைமையில் நற்கருனை பவனியும், மறையுரையும் நடைபெற்றது.
9-ம் திருவிழாவான திங்கள்கிழமை (ஜன. 22-ம் தேதி) காலை 5.30 மணிக்கு முதல் திருப்பலி, 7மணிக்கு திருயாத்திரையுடன் திருப்பலி . இரவு 6 மணிக்கு சிகர நிகழ்ச்சியான திருக்கல்யாண மாதா தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று மிளகு, உப்பு காணிக்கை செலுத்தி வழிப்பட்டனர். தொடர்ந்து தூத்துக்குடி மறைமாவட் ஆயர் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடைபெற்றது.
10-ம் திருவிழாவான இன்று (ஜன. 23-ம் தேதி) காலை 5.30 மணிக்கு தேரில் முதல் திருப்பலி, 7. மணிக்கு திருயாத்திரையுடன் புது நன்மை தூத்துக்குடி மறை மாவட்ட முன்னாள் ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் கூட்டுத் திருப்பலி, புது நன்மை, உறுதி பூசுதல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 10.30 மணிக்கு மலையாள திருப்பலி, 12 மணிக்கு திருப்பலி, 2 மணிக்கு ஆங்கில திருப்பலி, 4.30 மணிக்கு தமிழில் திருப்பலி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை திருத்தல அதிபர் வெனிசுகுமார் மற்றும் இறை மக்கள் செய்திருந்தனர்.


