செய்துங்கநல்லூரில் சிவகாமி சமேத பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி அதிகாலை நடை திறக்கப்பட்டது. சிவன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் நடந்தது. பிரதோஷ விழாவை முன்னிட்டு இந்த கோயில் பதஞ்சலி வியாக்கிரபாதீஸ்வரர், சிவகாமி அம்மாள், நந்திக்கு சிறப்பு அபிசேகம் நடந்தது. தொடர்ந்து சப்பர புறப்பாடு நடந்தது. பின் பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகளை அர்ச்சகர் முத்துராமன் செய்திருந்தார். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குரு மாரியப்பன் தலைமையில் ஆன்மிக பக்த பேரவையினர் செய்திருந்தனர்.


