தூத்துக்குடியில் அதிகனமழை வெள்ளத்தால் கடந்த 6 நாட்களாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16,17,18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தற்போதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. அதிகன மழையால் கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் புதியம்புத்தூர் அருகே உள்ள குளங்களும் உடைந்ததால் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.


