ஏரல் பகுதி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால் பஜார் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட பலசரக்கு கடைகள், பேக்கரி, ஸ்டேஷனரி கடைகள், பேன்சி ஸ்டோர்கள், ஜவுளிக்கடைகள், நகைக் கடைகள், ஹோட்டல்கள் என அனைத்து கடைகளும் முழுமையாக சேதம் அடைந்துள்ளது.
தினம்தோறும் கோடிக்கணக்கில் நடைபெறும் வர்த்தகம் பாதிப்பு. ஐந்து தினங்களில் மட்டும் 100 கோடி ரூபாய்க்கு மேல் பொருள்கள் பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் வேதனை.
ஏரல் பஜார் பகுதியில் உள்ள மளிகை கடைகளில் மழை வெள்ளத்தில் நனைந்த ஆயிரக்கணக்கான அரிசி மூட்டைகளை வியாபாரிகள் வெளியில் கொண்டு போடும் காட்சிகள் பார்ப்போர் கண்ணை கலங்க வைக்கிறது.
மளிகை கடைகளில் பருப்பு உளுந்து உள்பட பொருள்களும் மழையில் நனைந்ததால் முழுமையாக சேதம் அடைந்துள்ளது. பொருள்கள் அனைத்தையும் கடைக்கு வெளியே கொண்டு குப்பைத்தொட்டியில் கொட்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
நவதானிய பொருட்கள் அனைத்தும் முளைத்துள்ளது. பழக்கடைகளில் புகுந்த நீரால் பழங்கள் அனைத்தும் அழுகியது இதனால் பழங்கள் அனைத்தையும் வியாபாரிகள் குப்பையில் கொட்டும் அவலம் ஏற்பட்டுள்ளது.
ஹார்டுவேர்ஸ் கடையில் மழை நீர் புகுந்ததால் பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளது.
ஏரல் பஜார் பகுதியில் இருந்த பேன்சி கடைகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அனைத்து பொருட்களும் மழையில் நடந்து வீணானது.
ஏரல் பஜார் பகுதியில் கிறிஸ்துமஸ் மற்றும் தாண்டுக்காக செய்யப்பட்ட இனிப்பு பொருட்கள் அனைத்தும் வெள்ளை நீரில் சேதமடைந்ததால் அதனை குப்பைகளில் கொட்டும் வியாபாரிகள்.
ஏரல் பகுதியில் பெய்த தொடர் மழையால் வீடு இடிந்து விழுந்த நிலையில் குடும்பமே உடுக்க உடை கூட இல்லாமல் தவித்து வருவதாக ஒருவர் பேட்டி.
தொடர் மழை காரணமாக ஏரல் காவல் நிலையத்தில் சுமார் ஐந்து அடி உயரத்திற்கு நின்ற மழை வெள்ளத்தால் பாதிப்பு. மழை நீரில் காவல் நிலைய ஆவணங்கள் சேதம். காவல் நிலைய துப்பாக்கி மழை வெள்ளத்தில் பாதிப்பு. 50க்கும் மேற்பட்ட காவலர்கள் காவல் நிலையத்தை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


