இரு பெண்குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் முதிர்ச்சித் தொகை வழங்க வேண்டும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பெண் மனு அளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், புதூர் பகுதியைச் சேர்ந்த குமாரசாமி மனைவி மாரீஸ்வரி என்பவர் தனது பெண் குழந்தைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியருக்கு அளித்துள்ள மனுவில், எனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். முதலமைச்சரின் இரு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் கடந்த 15.11.2007-ல் தமிழக அரசால் ரூ.15,200 எனது இரு பெண் குழந்தைகளுக்கு டெபாசிட் செய்யப்பட்டது.
தற்போது இரு பெண் குழந்தைளுக்கும் 18 வயது நிரம்பி விட்டது. அவர்களுக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக முதிர்ச்சித் தொகை கேட்டு வருகிறேன். ஆனால் கிடைக்க வில்லை. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


