தனிமனித கொடையாளி சுலோச்சனா முதலியார் பாலத்தின் 181ஆவது பிறந்தநாள் விழா கொக்கிரகுளம் சுலோச்சனா முதலியார் பாலத்தின் முகப்பில் சிறப்பாக நடைபெற்றது. பாலத்தின் முகப்பில் உள்ள கல்வெட்டுக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் முனைவர் கவிஞர் கோ கணபதி சுப்பிரமணியன், வரலாற்று ஆய்வாளர் டாக்டர்.S.சண்முகம்,வழக்கறிஞர் வி.டி. திருமலையப்பன், ஆகியோர்,தலைமை தாங்கி கல்வெட்டிற்கு மாலை அணிவித்தனர். எழுத்தாளர் நாறும்பூநாதன், மேலச்செவல் நிலக்கிழார். வி.டி.ராஜன், கவிஞர் சு.முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுலோச்சனா முதலியார் பாலத்திற்கு மலர்தூவி மரியாதை செய்யப்பட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கி 181 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது ஒரு தனி மனிதனுடைய கொடையினால் பாளை-நெல்லை இரண்டையும் இணைக்கும் ஒரு பாலத்தை அமைத்துக் கொடுத்த பெருமையை நினைவு கூறப்பட்டது. தனிமனித கொடையாளி சுலோச்சனா முதலியார் பெருமைகள் பறை சாற்றப்பட்டது. தமிழ் முழக்கப் பேரவை அமைப்பாளர்.தேசிய நல்லாசிரியர் செல்லப்பா, பொருநை இலக்கியவட்ட புரவலர் இரா.நாதன், பைபாஸ் மெடிக்கல் சண்முகவேலன், செல்லம்மாள், வழக்கறிஞர் கனகசபாபதி, மேனாள் வங்கி மேலாளர் அமிர்த ராமலிங்கம் ரோட்டரி.பாலசுப்பிரமணியன், முன்னாள் துணை ஆட்சியர் தியாகராஜன்,முனைவர்.சரவணக்குமார், கவிஞர் செ.ச.பிரபு, கவிஞர்.சுப்பையா, நூலகர் அகிலன் முத்துக்குமார், தூய தமிழ் பற்றாளர் விருது பெற்ற சிவ செல்வமாரிமுத்து, ஐ.ஓ.பி செல்லப்பா, சிந்துபூந்துறை தெய்வநாயகம், ஜெயக்குமார்,மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்விற்கான ஏற்பாடுகளை மாமனிதர் தனிக் கொடையாளி சுலோச்சனா முதலியார் பாலம் புகழ் போற்றும் நலக்குழு சிறப்பாக செய்து இருந்தினர்.


