தூத்துக்குடியில் சிறப்பு வாக்காளர் பட்டியல் முகாம் நடைபெறும் மையத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சரவண வேல்ராஜ் ஆய்வு செய்தார்.
தூத்துக்குடியில் தேர்தல் சிறப்பு வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முறை முகாம் நடைபெறும் மையமான புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை தேர்தல் வாக்காளர் பட்டியல் பார்வையாளர்/தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மேலாண்மை இயக்குநர் ஈ.சரவண வேல்ராஜ், மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி முன்னிலையில் இன்று பார்வையிட்டார். பின்னர் அவர் வாக்காளர் கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


