தூத்துக்குடி மாவட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சரவணவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில்; வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள், 2024 குறித்த ஆய்வுக்கூட்டம் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் / மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சரவணவேல்ராஜ், தலைமையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, முன்னிலையில் இன்று (25.11.2023) நடைபெற்றது.
கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்தப்பணியில் மேற்கொள்ளப்படும் நடைமுறை குறித்து வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களால் எடுத்துரைக்கப்பட்டு, அரசியல் கட்சி பிரதிநிதிகளின் ஆலோசனை மற்றும் கருத்துக்கள் கேட்கப்பட்டது. அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கைகளை பரிசீலனை செய்து, முடிவு செய்திட, வாக்காளர் பட்டியல் பார்வையாளரால் அறிவுறுத்தப்பட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து தகுதியான வாக்காளர் பெயர்களையும் மற்றும் இளம் வாக்காளர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கவும், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கவும், வாக்காளர் பட்டியலில் உள்ள இரட்டைப் பதிவு, இறந்த நபர்களின் பதிவு மற்றும் இடம்பெயர்ந்த நபர்களின் பதிவுகளை நீக்கம் செய்து ஆரோக்கியமான வாக்காளர் பட்டியல் வெளியிட அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய்சீனிவாசன், அங்கீகரிப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் ஆக்னல் ப்ரீஸ் (தி.மு.க.), செல்வக்குமார் (தி.மு.க.), ரவி (தி.மு.க.), ஆனந்தசேகரன் (தி.மு.க.), சந்தானம் (அ.தி.மு.க.), ராஜேந்திரன் (அ.தி.மு.க.), முரளிதரன் (காங்கிரஸ்), சிவராமன் (பா.ஜ.க), கிஷோர்குமார் (பா.ஜ.க.), குணசீலன் (ஆம் ஆத்மி), சிவா (பி.எஸ்.பி), மாடசாமி(சி.பி.ஐ), ஞானசேகர் (சி.பி.ஐ), நாராயணமூர்த்தி (தே.மு.தி.க.) மற்றும் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர். அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


