தூத்துக்குடி மாநகராட்சி எஸ்.கே.எஸ்.ஆர் காலனி, சக்தி விநாயகர்புரம் மற்றும் எழில் நகர் ஆகிய பகுதிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறுகையில், “இப்பகுதிகளானது கடந்த பல ஆண்டுகளாக மழை வெள்ளத்தினால் மிகவும் பாதிப்படைந்த ஒரு பகுதியாகும் தற்பொழுது புதிய வடிகால் பணிகள் தார் சாலைகள் அமைத்த பின்பு இப்போது பெய்த மழையில் அந்த பகுதியில் நீர் தேங்கவில்லை. மேலும் வரும் காலங்களிலும் நீர் தேங்காது என்று மேயர் தெரிவித்தார்.


