தூத்துக்குடியில் ‘மீனவப் பெண்களுக்கான செவுள் வலை வடிவமைத்தல், பின்னல் மற்றும் வலை சீர்செய்தல் என்ற ஒருவாரகால உள்வளாகப் பயிற்சியின் நிறைவு விழா நடைபெற்றது
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையானது சென்னை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியுதவியுடன் ‘மீனவப் பெண்களுக்கான செவுள் வலைவடிவமைத்தல், பின்னல்மற்றும் வலைசீர் செய்தல் பற்றிய பயிற்சி” என்ற ஒருவாரகால உள்வளாகப் பயிற்சியை 08.11.2023 முதல் 16.11.2023 வரை நடத்தியது.
இதன் நிறைவுவிழாவானது இன்று தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சிமையத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில் தூத்துக்குடிமாவட்டம்,திரேஸ்புரத்தைச் சார்ந்த 30 மீனவப் பெண்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையின் உதவிப் பேராசிரியர் மற்றும் திட்டஒருங்கிணைப்பாளர் த.ரவிக்குமார் வரவேற்புரை வழங்கினார்.
இவ்விழாவிற்கு ப. அகிலன், முதல்வர், மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி தலைமை வகித்தார். அவர்தம் தலைமை உரையில் மீனவப் பெண்களுக்கான செவுள் வலை வடிவமைத்தல், பின்னல் மற்றும் சீர்செய்தல் பயிற்சியானது எதிர்காலத்தில் தங்களுக்கு ஒரு வருமானம் ஈட்டக்கூடியத் தொழிலாக மாறவேண்டும் என வலியுறுத்தினார்.
இவ்விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி சி. தினேஷ்குமார், ஆணையர், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர்தம் சிறப்புரையில் மீன்பிடித் தொழில் வளர்ச்சியில் பெண்களின் பங்கு இன்றியமையாதது என்றும் மேலும் இப்பயிற்சியானது மீனவப் பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் எனவும் எடுத்துரைத்தார். மேலும் மதிப்பூட்டியமீன் உணவுப்பொருட்களை சந்தைப் படுத்துதல் மூலம் மீனவப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல் குறித்து எடுத்துரைத்தார்.
மாவட்டத் திறன் மேம்பாட்டு பயிற்சி அலுவலகம், உதவி இயக்குநர் ஜே. ஏஞ்சல் விஜய நிர்மலா, இணை இயக்குநர், மகளிர்த் திட்டம், வீ.வீரபத்ரன், மற்றும் மாவட்டதொழில் மையம், பொதுமேலாளர் சொர்ணலதா, இப்பயிற்சியின் நிறைவுவிழாவில் கலந்து கொண்டனர். மேலும், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெற்ற பயிற்சிகளில் கலந்து கொண்டு பயன் பெற்ற தருவைகுளம் மற்றும் பழையகாயல் போன்ற மீனவ கிராமங்களைச் சார்ந்த 60 மீனவப் பெண்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
இப்பயிற்சியின் மூலம் பயன்பெற்ற மீனவப்பெண்கள் பயிற்சியின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டதோடு இப்பயிற்சித் திட்டத்திற்கு நிதியுதவி வழங்கிய தமிழ்நாடுதிறன் மேம்பாட்டு கழகத்தின் பொதுமேலாளர் இன்னசன்ட் திவ்யா-க்கு நன்றி தெரிவித்தனர். மீன்வளக் கல்லூரிமற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் உதவிப் பேராசிரியர் மாரியப்பன் நன்றியுரை வழங்கினார். அத்துறையைச் சார்ந்த அந்தோணி மிக்கேல் பிரகாகர், மௌலின் சந்திரா, முதுநிலை ஆராய்ச்சியாளர்கள் அமலஷஜீவா, எமிமா, தினேஷ்குமார் மற்றும் வீரமணி ஆகியோர் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்பட்டனர்.


