இன்று அதிகாலை நான் நடைபயணம் செய்து கொண்டிருக்கும் போது நண்பர், குற்றாலம் காசிமேஜர் புரம் சட்டநாதன் என்னை போனில் தொடர்ப்பு கொண்டார் . அண்ணாச்சி பாலகுமாரன் அய்யா எழுதிய “கங்கை கொண்ட சோழன்” நான்கு பாகம் நூலை என் மகன் சென்னையில் இருந்து வாங்கி வந்திருந்தான். தற்போது படித்துக்கொண்டிருக்கிறேன். அதில் ஒரு விசேஷம் என்ன தெரியுமா? நான் உபயோகித்த புத்தகங்கள் என ஒரு பெரிய நூல் பட்டியலை இந்த நூலுக்காக எழுத்தாளர் எழுதியுள்ளார்.
அந்த பட்டியலில் முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய நெல்லை துறைமுகங்கள் நூலை குறிப்பிட்டுள்ளார் என்றார். மகிழ்ச்சியின் எல்கைக்கே சென்று விட்டேன். மிகப்பெரிய எழுத்து சித்தர் நமது நூலை மேற்கோள் காட்டியிருக்கிறார் என்றால் நமக்கு எவ்வளவு பெருமை. நம்மையும் பெருமை படுத்திய எழுத்தாளர் பாலகுமாரன் அய்யா அவர்களுக்கும், நம்மிடம் பகிர்ந்துகொண்ட நண்பர் சட்டநாதன் அவர்களுக்கும் மிக்க நன்றி- அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


