நாமக்கல் நண்பர் தமிழ் சங்கர் என்னோடு போனில் தொடர்பு கொண்டு நீலம் வெப்சைட்டில் வந்துள்ள மு. கார்த்திக் எழுதிய கொற்கையில் காணாமல் போன புத்தர் சிலை என்ற தலைப்பிட்ட கட்டுரை குறித்து பேசினார்.
மு.கார்த்திக் எழுதிய இந்த கட்டுரையில் என்னுடைய நெல்லைத்துறைமுகங்கள் நூலை மேற்கோள்காட்டியுள்ளார். மேலும் நாகசாமி குழுவினர் ஆய்வு செய்து எடுத்த சிலையை பற்றி நான் நூலில் குறிப்பிட்டதாகவும், அந்த சிலை குறித்து நாகசாமி எழுதிய அறிக்கையில் எதுவும் குறிப்பிடவில்லை என எழுதியிருந்தார். நான் அந்த சிலை புகைப்படத்தினையே தூத்துக்குடி மாவட்ட கெஜட்டியர் நூலில் இருந்து தான் எடுத்தேன். எனவே அரசு ஆவணங்களில் அந்த சிலையை பற்றி குறிப்பு உள்ளது. அந்த சிலை புத்தர் சிலையா? பௌத்த சிலையா? என ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வரலாறு என்றாலே தொடர்ந்து ஆய்வுக்கு உள்படுத்த வேண்டிய ஒன்றாகவே இருக்கிறது. மு.கார்த்திக் சாரின் ஆய்வு வரவேற்க படவேண்டியது தானே. வாழ்துகள் மு. கார்த்திக் அவர்களே . என நூலை தங்களது ஆய்வுக்கு உட்படுத்தி இருப்பதற்கு நன்றி – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


