ஒரு எழுத்தாளனுக்கு மிகப்பெரிய சந்தோசம் என்னவென்றால் தனது சிஷ்ய பிள்ளைகளும், வாரிசுகள் தனது துறையில் இருப்பதுதான். எனக்கு அந்த பாக்கியம் கிட்டியிருக்கிறது. எனது சிஷ்யன் சுடலை மணி செல்வன் , காமராசு செல்வன் என்ற பெயரில் “குடிமவன்” என்ற நாவலை எழுதி தினமலரின் தாமரை பிரதர்ஸ் மீடியா பதிப்பகத்தில் வெளியிட்டுள்ளான். அந்த நூல் தற்போது பிரபலமாகி வருகிறது. தொடர்ந்து காமராசு செல்வன், “விடிலிகாடு” என்ற நாவலை எழுதி முடித்து இருக்கிறான். சென்னை புத்தக கண்காட்சியில் அந்த நூலை கொண்டுவர ஏற்பாடு செய்துகொண்டிருக்கிறோம்.
இதற்கிடையில் எனது மகன் கா.அபிஷ்விக்னேஷ் “அக்னியின் காந்தம்” என்ற சிறுகதை நூலை எழுதி வெளியிட்டுள்ளான். இந்த நூலை நெல்லையில் வைத்து எழுத்தாளர் வண்ணதாசன் வெளியிட அயோத்தி திரைப்பட இயக்குனர் மந்திரமூர்த்தி பெற்றுக்கொண்டார். அந்த நூலும் பரவலாக ஒவ்வொருவர் மனதிலும் இடம் பிடித்து வருகிறது. இன்று தினத்தந்தியில் அந்த நூலின் விமர்சனமும் வெளிவந்துள்ளது. வெளியிட்ட தினத்தந்தி நிறுவனத்துக்கும் ஆசிரியர் குழுவிற்கும் மிக்க நன்றி. தொடர்ந்து வாழ்வில் பல்வேறு நலன்களை இருவரும் பெற வாழ்த்துகள்& அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு
அக்னியின் காந்தம் நூல் விமர்சனம்
இந்த நூலின் ஆசிரியர், தனது 8 வது வயதில் எழுதிய முதல் சிறுகதை உள்பட 21 சிறுகதைகளை தந்து இருக்கிறார். ஒவ்வொரு கதையும் வெவ்வேறு கருப்பொருளுடன் வெவ்வேறு கதைக் களங்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டு இருக்கின்றன. குழந்தைகளுக்கான கதை, நகைச்சுவை , காதல், திகில் ஆகிய அனைத்து பாணிகளிலும இந்தக் கதைகள் எழுதப்பட்டு இருகின்றன. நவீன வாழ்க்கை நமது பாரம்பரரிய கலாச்சாரத்தை எவ்வாறு சீரழிக்கிறது என்பதை சிலகதைகள் சுட்டிக்காட்டுகின்றன. எதிரபாராத முடிவுகளைக் கொண்ட கதைகள் ஆசிரியரின் கற்பனைத் திறனை வெளிப்படுத்துகிறது.
(ஆசிரியர் கா.அபிஷ்விக்னேஷ்: வெளியீடு பொன்சொர்ணா பதிப்பகம் விலை ரூ 200 : செல்போன் 8760970002)


