தூத்துக்குடி ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் பொன்னிழா ஆண்டினை முன்னிட்டு பல்வேறு பணிகளை கல்லூரி நிர்வாகம் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி, ஸ்பிக் நகர் ரோட்டரி சங்கம், ஏ.எம் பவுண்டேஷன் மற்றும் திருநெல்வேலி காவேரி மருத்துவமனையும் இணைந்து மகளிருக்கான மருத்துவ முகாமினை நடத்தியது.
இம்மருத்துவ முகாமில் ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியின் தலைவர் ஏ.பி.சி.வி. சொக்கலிங்கம் தலைமை வகித்தார். முகாமை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஸ்பிக் நிறுவனத்தின் முழுநேர இயக்குநரான பாலு தொடங்கி வைத்தார். மகளிருக்கான மருத்துவ பரிசோதனைகளை திருநெல்வேலி காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் செய்திருந்தனர். குடல் மற்றும் இரைப்பை அறுவை சிகிக்சை நிபுணர் டாக்டர் கார்த்திகேயன், காது,மூக்கு, தொண்டை நிபுணர் டாக்டர் வினோதன், எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பிராபகரன், பிசியோதெரபி, நுரையீரல் செயல்பாடு சோதனை நிபுணர் டாக்டர் வீபின், பொதுமருத்துவர் டாக்டர் ரஜிதா, ஏ.எம். பவுண்டேஷன் பொது மருத்துவர் டாக்டர் இவாஞ்சலின் ஆகியோர் கலந்து கொண்டோருக்கு சிகிச்சை அளித்தனர். காவேரி மருத்துவமனையின் பிராந்திய மேலாளர் கார்த்திக், உதவி மேலாளர் சதீஷ் சிகிச்சைகான ஏற்பாடுகளை செய்திருந்தனர். காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மருத்துவ ஆலோசனைகளையும் மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்பட்டது. இந்த முகாமில் 300 மகளிர்கள் மருத்துவ பயன் பெற்றனர். மருத்துவ ஏற்பாடுகளை ரோட்டரி சங்கத் தலைவர் ரோட்டேரியன் சுந்தரேசன், ஸ்பிக் நகர் ரோட்டரி சங்கம், முன்னாள் தலைவர் ரோட்டேரியன் பாலமுருகன் மற்றும் உறுப்பினர்கள் பொன்னுசாமி, ரமேஷ் ஆகியோருடன் கல்லூரி நிர்வாகமும், பொறுப்பு முதல்வரும், அலுவலர்களும் பேராசியர்களும் சிறப்பாகச் செய்திருந்தனர்.


