முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஆத்திக்காடு கிராமத்தை சேர்ந்த தொழிலாளி சரவணன் மனைவி அழகு ராணி (35). இவர் நேற்று காலை அருகே உள்ள ஒரு தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த கட்டுவிரியன் பாம்பு ஒன்று எதிர்பாராத விதமாக அவரை கடித்துள்ளது.
இதனால் பயமடைந்த அவர், முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துககு சிகிச்சை வந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர் மற்றும் ஊழியர்கள் பாம்பு குறித்த விபரம் கேட்டனர். அப்போது அவர் தான் கொண்டு வந்திருந்த கண்ணாடி கவரில் கடித்த பாம்பு காண்பித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் பாம்பை பரிசோதித்தபோது பாம்பு இறந்து போனது தெரியவந்தது.
இதனையடுத்து பாம்பின் தன்மை அறிந்து அப்பெண்ணிற்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அப்பெண்ணை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைககு பாம்புடன் வந்த பெண்ணால் மருத்துவனையில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.


