மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்திரசேகரின் சீரிய முயற்சியில் முதுகலை தொல்லியல் துறை பட்டப் படிப்பு இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. இந்த படிப்பில் 25 மாணவ மாணவிகள் இப்போது படித்து வருகின்றனர். பேராசிரியர் சுதாகர் அவர்கள் இந்த துறையின் தலைமை பொறுப்பை ஏற்று பணியாற்றி வருகிறார். தொல்லியல் துணைப் பேராசிரியர் முருகன் மற்றும் துணைப் பேராசிரியர் மதிவாணன் அவர்கள் முறைப்படி இந்த மாணவர்களுக்கு தொல்லியல் நுட்பங்களை கற்பித்துக் வருகின்றனர்.
வல்லவன் கோட்டை என்ற கிராமம் பல்கலைக் கழகத்தில் இருந்து வடமேற்கே 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து சுகன்யா என்ற மாணவி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் தொல்லியல் பட்டப் படிப்பு தொடர்ந்து வருகின்றார். மாணவி சுகன்யா வகுப்பறையில் பேராசிரியர்கள் கற்றுக் கொடுத்த நுட்பத்தைப் பயன்படுத்தி வல்லவன் கோட்டையில் ஒரு பழமையான கல்வெட்டைக் கண்டுபிடித்தனர்.
இதனைப் பற்றி ஆய்வு செய்யப் இந்த துறைப் பேராசிரியர்கள் மற்றும் தொல்லியல் படிக்கும் அதனை மாணவ மாணவியர்களும் நேற்று வல்லவன் கோட்டைக்கு சென்றனர்.
இந்த குழு வல்லவன் கோட்டையில் கீழ்க் கண்டவற்றைக் கண்டறிந்தது:

இந்த கல்வெட்டு இவ்வூருக்கு வெளியே உள்ள மாடசாமி கோயில் உள்ளது. இந்த கல்வெட்டில் சந்தன மற்றும் குங்கும திலகமிட்டு கோட்டை மாடசாமி என மக்கள் வழிபட்டு வருகின்றனர். அதாவது வட்டெழுத்து கல்வெட்டைக் கடவுளாக வழிபட்டு வருகின்றனர்.
“பாண்டிய மன்னன் மாறஞ்சடையன் 25ஆம் ஆட்சி ஆண்டில் களகொடி நாட்டு உள்ள குலமங்கலத்தில் என்ற ஊரில் கலங்குடியான் மணவாட்டி வேம்பநாட்டு நீலபுறத்தாளியம் மொழி சாட்டி நிதிவரமங்கலத்து அரும்புடை பெரும் பள்ளிக்கு 50 ஆடுகள் முதல் தவனையாகவும் மேலும் 55 ஆடுகளை இரண்டாம் தவனையாகவும் மொத்தமாக 105 ஆடுகள் தானமாக கொடுத்ததாக இந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது”. இந்த கல்வெட்டை செதுக்கிய ஆண்டையும் இந்த கல்வெட்டு விளக்குகிறது. இந்தக் கல்வெட்டு கி.பி 8ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. அதாவது 1228
ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கண்டறிந்தனர். தமிழ் என தங்கள் குழந்தைகளுக்கு பெயரிட்டு மகிழும் தமிழ் சமூகம் இவ்வளவு பழமையான தமிழ் கல்வெட்டை மக்கள் வணங்குவதில் வியப்பேதும் இல்லை..
மேலும் இந்த கோயிலுக்கு வடமேற்கே ஒரு கல்வட்டம் உள்ளது. கல்வட்டம் என்பது பல ஈமத்தாழிகளைப் புதைத்த இடம். இந்த இடத்தை அடையாளப் படுத்த தாழியைப் புதைத்த இடத்தைச் சுற்றி பெரிய பாறைகளால் ஒரு வட்டத்தை நம் முன்னோர்கள் அமைப்பை உருவாகுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால் இந்த கோயில் அருகே உள்ள இந்த வட்டக் கல் வட்டமாக இல்லை. மாறாக இது செவ்வக வடிவமாக உள்ளது. இது சுமார் 6 செண்ட் பரப்பளவில் சதுர வடிவில் பெரிய கருங்கல் பாறைகளால் இதனை உருவாக்கியுள்ளனர். இந்த அமைப்பு சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனவும் இந்த குழுவினர் கண்டறிந்தனர். மேலும் இக் கல்வட்டம் அருகே இரும்பை உருக்கும் கசிவுகள், கருப்பு, சிவப்பு, கருப்பு சிவப்பு பானை ஓடுகள் ஏராளமாக கிடைக்கின்றன!
மேலும் வல்லவன் கோட்டை என்ற இவ்வூரின் பெயரே இங்கு நீண்ட வரலாற்று புதைந்துள்ளது எனப் பறைசாற்றுகிறது.



