தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் ஆறாம் பண்ணை ஊராட்சியில் உள்ளாட்சி தினம் கிராம சபை கூட்டம் நடைபெற்றது கிராம சபை கூட்டத்திற்கு ஆராம்பண்ணை ஊராட்சி மன்ற தலைவர் சா. சேக் அப்துல் காதர். தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆறாம் பண்ணை கிராம நிர்வாக அதிகாரி ஸ்டீபன் கென்னடி. வார்டு உறுப்பினர் இப்ராஹிம். பற்றாளர் ராமு. நியாய விலை கடை ஊழியர் சீனி. விவசாய அதிகாரி ஏஓ வெங்கடேஷ். அங்கன்வாடி பணியாளர் கோமதி. கிராம நிர்வாக உதவியாளர் சரத்குமார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு பணித்தள பொறுப்பாளர் ஜாஸ்மின் ஜீவா. பஞ்சாயத்து செயலாளர் ஹரிஹரசுந்தரம். மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மழைக்காலம் மற்றும் முழு சுகாதார பற்றி விழிப்புணர்வு செய்யப்பட்டது. கூட்டத்தில் புதிய வாக்காளர் சேர்ப்பதற்கான அறிவுரை வழங்கப்பட்டது. மக்களுக்கு ஆன்லைன் வீட்டு தீர்வை கட்டுவது எப்படி என்பதை சொல்லப்பட்டது. மேலும் வீடு கட்டுவதற்கு கட்டிட அனுமதி ஆன்லைனில் வாங்குவதை பற்றி சொல்லப்பட்டது மற்றும் தெருகளுக்கு பேர் பிளாக். தடுப்பு சுவர் பற்றி தீர்மான நிறைவேற்றப்பட்டது


