தூத்துக்குடி புதிய கலெக்டர் லெட்சுமிபதி தூத்துக்குடி மாவட்ட கலை இலக்கிய இசை சங்க உறுப்பினர் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு சந்தித்தார். அவர் தாமிரபரணியை தூய்மை படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆட்சித்தலைவர் இதற்காக சீக்கிரமாக ஒரு கூட்டத்தினை கூட்டுவோம் என்றார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் குறைந்த கிலோ மீட்டரில் ஓடி வரும் தாமிரபரணியில் இரண்டு அணைக்கட்டுகள் உள்ளன. இந்த இரண்டு அணைக்கட்டுகளிலும் அமலை செடிகளை அகற்றி, மற்ற இடங்களில் உள்ள முள்செடிகளை அகற்றி, கரைகளில் மரங்களை நட்டு சாக்கடை கலக்கும் இடங்களில் சாக்கடையை கலக்க விடாமல் நடவடிக்கை மேற்கொண்டால் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணியை தூய்மைபடுத்தி விடலாம். அதற்கான நடவடிக்கையை மாவட்ட ஆட்சிதலைவர் உடனடியாக எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


