இந்த வருடம் பருவமழை பொய்த்து விட்டது எனலாம். இருந்தாலும் கொசு உற்பத்தி அதிகமாகவே இருக்கிறது. வீடுகளில் கொசுவலை மிகவும் அவசியம். காரணம் டெங்கு, சிக்கன்கூனியா, மூளைக்காய்ச்சல், சீகா என நிறைய வைரசால் வரும் நோய்களைக் கொசுக்களே பரப்புகின்றன.
சுமார் பத்து வருடத்திற்கு முன் எங்கள் வீட்டில் உள்ள அனைத்து வாசல்கள் மற்றும் சன்னல்களிலும் கொசு வலை பொருத்தி இருந்தோம். இவை பிளாஸ்டிக் வலைகள். இவற்றை அணில்கள் ஆங்காங்கே கடித்து நிறைய ஓட்டைகள் போட்டிருந்தன.. இதனால் கொசு எளிதாக வீட்டில் படை எடுத்து வர ஏதுவாக இருந்தது. வீடு முழுக்க கொசுவலைகளை மாற்றியே ஆகவேண்டும் என்ற நிலை.
பத்து கொசுவை மாட்ட இணையதளத்தில் ஒரு தொலைப்பேசி எண்ணைத் தேடிப் பிடித்துப் பேசினேன். சன்னல்கள் மற்றும் வாசல் அளவை எடுத்து அனுப்பச் சொன்னார்கள். எடுத்து அனுப்பினேன். பிளாஸ்டிக் வலை என்றால் 28 ஆயிரம் ஆகும் என்றார்கள். இரும்பு வலை என்றால் மேலும் 7 ஆயிரம் சேர்த்துக் கொள்ளுங்கள் என்றார்கள்.
நண்பர் ஒருவரை அழைத்தேன். இந்த கொசுவலை பற்றிப் பேசினேன். அவர் ஒரு எலக்ரிசியன். தேவையான பொருட்களை வாங்கி நாமே மாட்டுவோமா? என்றார்.
சரி.. முயற்சி செய்யலாமே என்றேன்.
இரும்பு கொசுவலை, வெல்குரோ தேவையான வகை கத்தரிக்கோல் போன்றவற்றை வாங்கினோம். மொத்தச் செலவு 4500/-தான் வந்தது. இருவரும் சேர்ந்து கொசுவலையை அனைத்து சன்னல் மற்றும் கதவுகளில் பொருத்தினோம். என் மாமனாரும் அவ்வப்போது சற்று உதவினார். வேலை கச்சிதமாக முடிந்தது.
இன்று உலக சிக்கன நாளாம் (world Thrift day). இன் நாளில் கணிசமான அளவு படத்தைச் சேமிக்க முடிந்தது.


