உலகப் புகழ் பெற்ற ஏவிடி தேயிலை
நிறுவனரின் ஏ.வி.தாமஸ் மாளிகை
நெல்லை மாவட்டம்,
இடையன்குடியில் இருக்கின்றது.
இம்மாளிகையில்,
அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாக,
நாளும் ஏழைகளுக்கு பகல் உணவு வழங்கப்பட்டு வந்தது.
2018க்கு பிறகு,
மாதம் 5 கிலோ அரிசி,தேவையான பருப்பு மற்றும் மசாலா சாமான்கள் வழங்குகின்றனர்.
இடையன்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் ஏழை மாணவச் செல்வங்களுக்கு,கல்வித் தொகை,சீருடை வழங்குகின்றனர்
ஆபிரகாம் மோசஸ்-இசபெல்லா இணையரின் மகன்
ஆல்பிரட் வேதநாயகம் தாமஸ் (எ)A_V_தாமஸ்
பிறப்பு 9-8-1891
பிறந்த ஊர்
அழகப்பபுரம் திருமால் நகர்
உடன் பிறந்தோர்
ஏ.ஜி.எஸ்.ரத்தினராஜ்
செல்லம்மாள்
ரேச்சல் நேசம் அம்மாள்
கிரேஸ்
ரோஸ் மவுண்ட்
நவமணி
எம்.ஏ.ஜேம்ஸ்
இடையன்குடி மற்றும்
சாயர்புரத்தில் கல்வி பயின்றார்.
1921 இல், சுகிர்தத்தை மணந்தார்.
பிள்ளைகள்
மேபல் அருள்
(ஐஜி அருள் மனைவி)
ஜெயசிங் தாமஸ்
டாரீஸ் விக்டர்
மற்றும் ஒருவர்
ஏ.வி.தாமஸ் ஒரு தோட்டத் தொழிலாளர் ஒப்பந்ததாரராக இருந்து,
ஏ.வி.டி தேயிலை நிறுவன உரிமையாளர் ஆனவர்.
1925 இல் AVT தேயிலை நிறுவனத்தை,
100 ஹெக்டேரில் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், பசும்பாறையில் நிறுவினார்.
1937 -1940, ஆலப்புழை நகர்
ஆட்சி மன்றத் தலைவர்,
1947 -1949,
இந்திய இரப்பர் வாரியத்தின் தலைவர்
1950 -1951,
இரண்டாம் உலகப் போரின் போது
ராயல் கமிஷன் பணி
1952, திருச்செந்தூர் நாடாளுமன்ற உறுப்பினர்
1957-1962, இராதாபுரம் சட்டமன்றத் தொகுதி
இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர்
12 -5-1968 இல் மறைந்தார்.
ஏவிடி நிறுவனம்,கொச்சியைத் தலைமை இடம் ஆகக் கொண்டு இயங்கி வந்து,
2000ஆம் ஆண்டில் இருந்து,
சென்னை எழும்பூர் தலைமை இடமாக ஆயிற்று.
ஏவி தாமசின் மகன் ஜெயசிங் தாமஸ் வழிப் பெயரன் அஜித் தாமஸ் பொறுப்பில் இயங்குகின்றது.
தேயிலை, காபி, இரப்பர், மிளகு, ஏலக்காய்,
தோல் பொருட்கள், உணவுப் பொருட்கள்,
இயற்கை பழச் சாறுகள், பதப்படுத்திய ரப்பர் மரங்கள்,கிட்டங்கிகள்,தாவர வேதியத் தொழில்நுட்பம்,பங்கு முதலீடுகள் என அவர்களது தொழில் பரப்பு விரிந்து கிடக்கின்றது.


