திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்த ராஜ் அவர்களுக்கு சிறப்பு சிறார் காவல் பிரிவு பொறுப்பாளருமான டாக்டர் கென்னடி பாராட்டி “சந்தன மாலை” அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
கடத்தப்பட்ட குழந்தையை மீட்டு பெற்றோருவுடன் ஒப்படைத்த காவல் துணை கண்காணிப்பாளர் மேன்மைக்குரிய மு வசந்தராஜ் அவர்களை மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், சிறப்பு சிறார் காவல் பிரிவு பொறுப்பாளருமான டாக்டர் எஸ்.ஜே கென்னடி நேரில் சந்தித்து பாராட்டி “சந்தன மாலை” அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் புத்தளம் மணவாளபுரத்தைச் சார்ந்த கட்டிட தொழிலாளி முத்துராஜ் இவரது மனைவி ரதி இவர்களது மூன்று வயது குழந்தை ஸ்ரீ ஹரிஷ்யுடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சாமி தரிசனம் செய்து விட்டு இருந்தபோது கோவிலில் அறிமுகமான பெண் குழந்தை ஸ்ரீ ஹரிஷை கடத்திச் சென்றார் .இதுகுறித்து திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து 5 தனிப்படை அமைத்து குழந்தையை தேடி வந்தனர் . இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த பாண்டியன் அவரது மனைவி திலகவதி ஆகியோர் கடத்திச் சென்றது தெரிய வந்தது. கடத்தப்பட்ட குழந்தை ஸ்ரீ ஹரிஷை சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள பாண்டியனின் வீட்டில் இருந்து தனிப்படை போலீசார் மீட்டனர் .பின்னர் குழந்தையை திருச்செந்தூர் காவல் நிலையத்தில் பெற்றோர்களிடம் காவல் துணை கண்காணிப்பாளர் மு. வசந்தராஜ் ஒப்படைத்தார். காவல் துறையினர் அல்லும் பகலும் சிறப்பாக பணியாற்றி குழந்தையை உடனடியாக கண்டு பிடித்து பெற்றோர் ஒப்படைத்த காவல் துணை கண்காணிப்பாளர் மேன்மைக்குரிய மு வசந்தராஜ் அவர்களை மதர் சமூக சேவை நிறுவன இயக்குனரும், சிறப்பு சிறார் காவல் துறை பிரிவு பொறுப்பாளர்களில் ஒருவருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி நேரில் சந்தித்து பாராட்டி “சந்தன மாலை” அணிவித்து வாழ்த்தினார் . இதில் மதர் சமூக சேவை நிறுவன திட்ட அலுவலர் திரு மரியராஜ் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


