கோவில்பட்டியில் மாணவர்களுக்கான புத்தக கண்காட்சியை மாணவர்களே திறந்துவைத்தனர்.
கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான புத்தக கண்காட்சி நடந்தது. 2 நாட்கள் நடைபெறும் புத்தக கண்காட்சியில் தேசத்தலைவர்களின்வாழ்க்கை வரலாறு, அறிவியல், அகராதி, இலக்கியம், கட்டுரை, நாவல் ஆகிய தலைப்புகளில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. புத்தக கண்காட்சியினை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பார்வையிட்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் செல்வி,முன்னாள் மாணவர் முத்து முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மிருத்திகா பதிப்பக உரிமையாளர் ராஜபாண்டி வரவேற்றார்.மாணவர்களுக்கான புத்தக கண்காட்சியினை 6ம்வகுப்பு மாணவிகள் சபிஹா, சாதனா. ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தனர்.இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் ஏராளமானோர் புத்தக கண்காட்சியினை பார்வையிட்டனர். முடிவில் புத்தக கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் மணிமாறன் நன்றி கூறினார்.


