சிவகளை ஸ்ரீ சோரநாதவிநாயகர் திருக்கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு மிகப்பெரிய அளவில் ஆயிரக்கணக்கான பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. ஒன்பது படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. புல், பூண்டு, மரம், செடி, கொடிகள், பூங்கா, ஊர்வன , பறப்பன, நீர் , நில வாழ்வன, சிறுவர் ,பெரியவர், பெண்கள், சரவண பொய்கையில் கார்த்திகை பெண்கள் , கிரிக்கட் விளையாட்டு பொம்மைகள், மரப்பாச்சி பொம்மைகள், பொன்னூஞ்சல், செட்டியார் கடை பொம்மைகள், திருமண கோல பொம்மைகள், வளைகாப்பு பொம்மைகள், பஞ்ச லிங்கங்கள், விநாயகர்,சப்த கன்னியர்கள், தச அவதார பொம்மைகள், அஷ்டலெட்சுமி பொம்மைகள், தவழும் கண்ணன், அட்டகாளிகள், சுப்பிரமணியர், முருகர், யானை, மயில், முனிவர்கள், ரிஷிகள், தேவர்கள், கோமாதா, காமதேனு பசு, ஐயப்பன், அர்த்தநாதீஸ்வரர், மீனாட்சி அம்மன் , சரஷ்வதி , பாரதியார், சாய்பாபா , குபேரர், தெட்ஷனா மூர்த்தி , கொரோனா விழிப்புணர்வு மாஸ்க் அணிந்த பொம்மை மற்றும் கும்பம் போன்ற ஆயிரக்கணக்கான பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த கொலுவிற்கு வீடுகள் தோறும் பொம்மைகளை வாங்கிதந்துள்ளனர். புரட்டாசி மாதத்தில் அமாவாசை திதியான நோற்று திருக்கோயிலில் மீனாட்சி அம்மன் முன்பாக ஒன்பது படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு பொம்மைகள் முறைப்படி அடுக்கப்பட்டுள்ளன. இன்று முதல் நவராத்திரி விழா கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும். இந்த நாட்களில் பெருங்குளம் செங்கோல் ஆதின கர்த்தர் 103 வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சார்ய சுவாமிகள் கலந்து கொண்டு நவராத்திரியின் சிறப்பு பற்றிய அருளாசியுரை வழங்க உள்ளார்கள். ஒன்பதாம் நாளன்று சரஸ்வதி பூஜையன்று திருக்கோயிலில் உள்ள சரஸ்வதி சன்னதியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் புத்தகங்கள் மொத்தமாக வாங்கப்பட்டு ஏடு அடுக்கப்பட்டு சிறப்புபூஜை நடைபெறும். அன்று பூஜையில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சரஸ்வதி முன்பாக அட்சதையுடன் கூடிய நோட்டு மற்றும் பேனாவுடன் பிரசாதம் வழங்கப்படும். அன்று ஆயுத பூஜை என்பதால் அனைத்து வாகனங்களுக்கும் சிறப்பு பூஜை நடைபெறும். ஆயுத பூஜையன்று சிறுமிகளின் ஆன்மீக பாடல் நிகழ்ச்சியும் நடைபெறும். பத்தாவது நாளான விஜயதசமியன்று ஏடு பிரிக்கப்பட்டு. இளங்குழந்தைகளுக்கு சரஸ்வதி மற்றும் விநாயகர் முன்னிலையில் நெல்லில் எழுத்து பயிற்சி கற்றுக்கொடுக்கப்படும். நவராத்திரியில் ஒன்பது நாட்களும் ஒன்பது வகையான பிரசாதங்களும் பிரசாதமாக படைக்கப்படும்.இந்த ஒன்பது நாட்களிலும் பக்தர்கள் தினம் ஒரு நிறம் என்ற வகையில் ஒன்று போல ஒரே நிறத்தில் ஆடையணிந்து கொலுவை வழிபடுவர். விழா ஏற்பாடுகளை சிவகளை ஸ்ரீசோரநாதவிநாயகர் திருக்கோயில் மகளிர் வழிபாட்டுக்குழுவினரும். சிவகளை இந்து நன்குடி வேளாளர் இளைஞர் அணியினரும், சோரநாதவிநாயகர் திருக்கோயில் பாதுகாப்பு குழுவினரும் செய்துள்ளனர்.



